Tuesday, November 8, 2011

மூலிகை பெயர் காரணம்

மூலிகை பெயர் காரணம்
ஒரு உயிரின் மூலம் வரை சென்று தொடவல்லது என்பதாலும் 
முயலுகை என்பதே திரிந்து மூலிகை ஆனது என்று 2 காரணம் உண்டு. 

ஒவ்வொரு  மூலிகையும் ஒரு கிரகம் (Planets) அம்சமாகும்.

இவை நமது ரசாயன மருந்து  வியாதியும் நல்ல ஜீவ அணுக்களையும் அழிக்காமல் , நோய் கிருமிகளை மட்டும் அழிக்கும் வல்லமை வாயந்தது. 

உங்களக்குக்காக சில மூலிகைகள் : 

துளசி 
வில்வம் 
கற்றாழை 
கறிவேப்பிலை 
கற்பூரவள்ளி
ஓமம் 

இப்போது வழக்கத்தில் இருப்பது
thyme
oregano
basil
brahmi

pizza, salad  சாப்பிடும் அனைவருக்கும் மேலே சொன்னவை மிக பிரசித்தம்!!

உங்களக்கு  தெரிந்த பெயர்களை நீங்கள் கூறலாம்

பொதிகை

பொதிகை ஏன் சிறப்பு மிக்கது?
இந்த பூமி 3 : 1 , மூன்று மடங்கு நீர் மற்றும் ஒரு பங்கு நிலத்தால் ஆனது என்று அனைவர்க்கும் தெரியும். குமரி முனையும் 3 : 1 ,என்ற விகித்ததில் இருக்கிறது. இந்த கணக்கு சிறிது கூடினாலும் பூமி அதாவது நிலம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.  இதை வைத்து தான் நம் முன்னோர்கள்  
குறிஞ்சி 
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை 
என்று 5 விதமாக பிரித்தனர். இந்த ஐந்தின் குணமும் ஒரு காட்டில் இருப்பது நமது பொதிகை தான். 
இந்த உலகில் வேறு எந்த மண்ணிலும் ஐந்தும் ஒருசேர இல்லை. இந்த சிறப்பு நமது பொதிகைக்கே சேரும். 


பொதிகை மலையில் தான் நமது குற்றாலம் இருக்கிறது. 

இட்லி - பெயர் காரணம்

இட்லி பெயர் காரணம்
மாவை தட்டில் வைத்து இட்டு அவிப்பதால் ( அரிப்பதால்/ வேக வைப்பதால் )
அதற்கு இட்அரி  என்று பெயர் வந்தது . பேச்சு வழக்கில் அது இட்லி என்று ஆனது. 


Saturday, April 3, 2010

Thirukural

Kural of Day
2- Blessing of Rain
2.1 வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணர  பாற்று.

The genial rain ambrosia call
the world but  lasts while rain shall fall.

Regards
Shanthagomathi
www.desiresanddesign.scom

Tuesday, March 30, 2010

Thirukkural

 Kural of Day1- Praise the God
1.10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருபவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். 

The sea of births they alone swim
Who clench His Feet and cleave to Him.
Regards
Shanthagomathi
www.desiresanddesigns.com

Thursday, March 25, 2010

Thirukkural

Kural of Day1- Praise the God
1.9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 

உடல், கண், காது, மூக்கு, செவி, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலை தான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி  நடக்காதவனின் நிலையும் ஆகும்.

Like senses stale that head is vain
which bows not to Eight-Virtued Divine.
Regards
Shanthagomathi
www.desiresanddesigns.com

Sunday, March 21, 2010

Thirukkural

Kural of Day1- Praise the God
1.8 அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தக் சான்றோரின் அடியொற்றி நடபவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல     

Who swims the sea of vice is he
who clasps the feet of Virtue's sea.

Regards
www.desiresanddesigns.com